நாலும் கலந்துனக்கு நான் தருவேன் - கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
![]() ஸ்ரீ ஆதி விநாயகர் துணை |
புது வருடம்
சித்திரை மாதம் 14ஆம் தேதி சர்வதாரி வருடம்,புது வருடம் பிறக்கிறது,பன்னிரண்டு ராசிகளூக்கும்,
இருவத்தி ஏழு நக்ஷத்திரங்களூக்கும்
தொடர்புடைய புது வருடம் பிறக்கிறது,
ஒவ்வொரு புது வருடம் பிறக்கும் போதும்,
ஒவ்வொரு விதமாக நம்பிக்கை ஏற்படுத்திக் கொள்கிறோம்.
பிறக்கப் போகும் இந்தப் புது வருடம் நமக்கு ,
எல்லா நலன்களையும், எல்லா வளங்களையும் கொண்டு
வந்து கொட்டப் போகிறது, என்கிற அசைக்க முடியாத
நம்பிக்கை, நம்மைப் புத்துணர்வு கொள்ள வைக்கிறது.
கோவில்களில் பற்பல யாகங்கள், பூசைகள்,
சிறப்பு வழிபாடுகள் நடக்கின்றன,
இந்த வருடம் எப்படி இருக்கும் என்று
பஞ்ஜாங்கம் படிக்கிறார்கள்.
மக்கள் அனைவருமே உடலில் புத்தாடைகள் அணிந்து,
மனதில் வண்ண வண்ண நம்பிக்கைகளை அணிந்து
புத்துணர்ச்சி பெறுகிறோம், மாங்காய்ப் பச்சடி,
வேப்பம்பூவை இட்டு உண்கிறோம்,
இனிப்பும் கசப்பும் கலந்ததுதான் வாழ்க்கை
என்னும் தத்துவத்தை உணர.
அறு சுவை உணவு உண்கிறோம்......!!
அது சரி, ஆனால் இத்தனை புது வருடங்கள் வந்தன,
போயின, இது வரை நாம் நம் சமூகத்துக்கு,
நம் நாட்டுக்கு ஏதாவது செய்திருக்கிறோமா...?
யோசித்துப் பார்த்தால் ஒன்றுமே இல்லை,
வரும் புத்தாண்டு தினத்திலாவது மக்களுக்கு நாட்டுக்கு
உபயோப்படுகிறாற்போல் ஏதாவது செய்வோமா....?
வரப்புயர நீர் உயரும் நீர் உயர நெல் உயரும்
நெல் உயரக் குடி உயரும் குடி உயர கோன் உயர்வான்,
கோன் உயர நாடுயரும்
அவ்வைப் பாட்டி சொன்னாள்
நாம்தான் முப்போகம் விளையும் நிலங்களையெல்லாம்
விற்றுக் காசாக்கிக் கொண்டிருக்கிறோமே,
அப்புறம் ஏது விளைநிலங்கள், விளை நிலங்களே
இல்லாமல் வரப்பு ஏது, நெல் ஏது, நீர் ஏது?
மக்கள் அனைவரும் இனியாவது
விளைநிலங்களை விற்க மாட்டோம், என்று ஓரு உறுதி
மொழி எடுத்துக் கொள்ளலாம்.
அது மட்டுமல்ல உலகத்துக்கே அபாயம் ஏற்பட்டிருக்கிறது
ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்ததால்,
உலகமே சூடாகி வருகிறது,
அன்டார்டிகா பனி மலையே உருகி வருகிறது,
இன்னும் சில காலத்துக்குள் மொத்தமும் உருகிவிடும்,
அப்படி உருகினால் கடல்நீர் மொத்தமும்
பூமிக்குள்ளே நுழைந்து விடும், ஒரு சுனாமியையே
தாக்குப் பிடிக்க முடியவில்லை,
அதைத் தடுக்க உலகை மாசுபடாமல் காக்க வேண்டும்,
நிறைய மரங்களை நட வேண்டும்,
காற்றை மாசுபடுத்தாமல் இருக்க வேண்டும்,
மரங்கள் இருந்தால்தான் மழை வரும்,
மழை பெய்தால்தான் பூமி குளிரும்,
பூமி குளிர்ந்தால்தான் பனி மலைகள்
காக்கப் படும்.
ஆகவே இந்த புது வருடப் பிறப்பன்று
நாம் அனைவரும் மரங்கள் நடுவோம்,
ஏற்கெனெவே இருக்கும் மரங்களையும்
பாதுகாப்போம் என்று ஒரு
உறுதி மொழி எடுத்துக் கொள்வோமா.....?
அன்புடன்
தமிழ்த்தேனீ
